ஆட்டோ சாரதிகளிடம் சகவாசம் வேண்டாம்; சகோதரிகள் அவதானமாக இருக்கவும்...!கணவன் வெளிநாட்டில் அல்லது வெளியூரில் தொழில் புரிந்தால் மனைவி பயணம் மேற்கொள்ள குறித்த பகுதியில் வசிக்கும் ஆட்டோவில் சவாரி செய்யும் வழமை நமது முஸ்லிம் பிரதேசங்களி் காணப்படுகிறது. 

தனிமுஸ்லிம் ஊர்களில் முஸ்லிம் ஆட்டோ டிரைவர்களோடும், கலப்பு ஊர்களில் வேறு மத ஆட்டோ டிரைவர்களோடும் செல்வதனை காணலாம், இந்த பயணம் சடுதியாக இருக்கும் அல்லது அனைத்து தேவைகளுக்கும் ஒரு ஆட்டோதான் என்ற நிலை இருக்கும் 15 நிமிடம் தொடக்கம் 01 மணித்தியாலம் வரையான இந்த துாரப்பயணத்தில் சிலவேளைகளில் சகோதரிகள் தனித்தும் இன்னுமோர் சந்தர்ப்பத்தில் சக நண்பிகளோடும் பெற்றோருடனும் செல்கின்றனர்.

இங்கு என்ன பிரச்சினை என்றால் ஆட்டோக்குள் ஏறும் போது முதல் இறங்கும் வரைக்கும் மௌனியாக இருக்கமாட்டார்கள் இருவரும் ஏகப்பட்ட விடயங்களை பேசிக்கொண்டு வருவர், இதில் நல்லது கெட்டது என்று ஒன்று இல்லை, இது தவிர உங்கள் ஆடை அழகு, நீங்கள் ஏன் குண்டாக இருக்கிறீ்ர்கள், நீங்கள் மேக்அப் போடல்லயா என்றெல்லாம் கேட்கப்படுகிறது, இது தவிர ஒரு சிலர் ஆட்டோவுக்குள் கெமராவும் பூட்டிவைத்துள்ளனாராம். இப்படி இருக்கையில் சகோதரிகளின் மொபைல் இலக்கங்களும் அந்த டிரைவர் இடத்தில் இருக்கும், இப்பொழுது WhatsApp Viber போன்ற தளங்களில் மூலம் இடைக்கிடை மேசேஜ் போட்டாக்கள் கூட செயார் ஆகிறதாம். வரம்புகளும் மீறப்படுகிறது.

ஆட்டோக்களில் பயணிப்பது குற்றமல்ல, துணையுடன், நல்லமுறையில் ஆடை அணிந்து, முஸ்லிம் பெண் என்ற தனித்துவ அடையாளத்துடன் மனதில் உறுதிகொண்டு பயணதித்தால் நன்று. அதற்காக அனைத்து சாரதிகளும் கெட்டவர்கள் அல்லர். ஒரு சிலர் செய்யும் செயற்படுகளால் ஏனையோரும் பாதிக்கப்படுகின்றனர்.


இது ஒரு சமூக நலன் கருதிய பத்தி்.
 
© Muslim Vanoli '2016 All Rights Reserved' 24 Hours Tamil online Islamic Radio Station.