மாதவிலக்குள்ள பெண்களும் நோன்புக் கடமையும்!ஆக்கம் T.S.A. அரபிக் கல்லூரி மாணவிகள்

கேள்வி-மாதவிலக்கு அடைந்த ஒரு பெண் பஜ்ருக்கு முன்னரே மாதவிலக்கு இரத்தம் துண்டிக்கப்பட்டு தன் மாதவிலக்கிலிருந்து விடுபடுகிறாள். எனினும் அவள் பஜ்ர் நேரம் ஆகும் வரை தன்மீது கடமையான குளிப்பை குளிக்கவில்லை. இந்நிலையில் அப்பெண் நோன்பு நோற்பது அனுமதியான விடயமா? அல்லது அவள் பஜ்ருக்கு முன்னரே குளிப்பது கடமையா?

விடை:
அனுமதியான விடயமாகும். பஜ்ருக்கு முன் மாதவிலக்குத் துண்டிக்கப்பட்ட ஒரு பெண் நோன்பு நோற்க நாடிய போதிலும் அவள் தன் குளிப்பை பஜ்ர் நேரம் வரை தாமதப்படுத்துவது அவளின் நோன்பிற்கு எவ்வித பங்கத்தையும் விளைவிக்காது. அவள் தன் மாதவிடாய் துண்டிக்கப்பட்டு, தான் அதிலிருந்து விடுபட்டதை உறுதி செய்து கொண்டு நோன்பிற்கான தன் எண்ணத்தை மனதில் ஏற்பதே அவளுக்கு போதுமானதாகும்.
பின் அவள் பஜர் தொழுகைக்காக கடமையான குளிப்பைக் குளித்த தொழுது கொள்வாள்.
இதனை கடமையான குளிப்பு விடயமாக ஸஹீஹூல் புஹாரியில் பதிவாகியுள்ள நபி (ஸல்) அவர்களின் செயல் விபரிக்கின்றது.
ஆயிஷா (றழி) மற்றும் உம்மு ஸலமா றழி ஆகியோர் அறிவித்ததாவது :
''இறைத்தூதர் அவர்கள் முழுக்குடைய நிலையில் இருந்தவர்களாக பஜ்ர் நேரத்தை அடைவார். பின்னர் குளித்து (தொடர்ந்து) நோன்பு நோற்பார்கள்''
ஆக ஒருவர் தன் மீது குளிப்பு கடமையான நிலையில் பஜ்ரை அடைந்தாலும், நோன்பை ஆரம்பிக்குமுகமாக அவர் குளிக்க வேண்டியதில்லை என்பது புலப்படுகின்றது.
அவ்வாறு நோன்பு நோற்பதற்காக அவர் குளித்துத்தான் ஆக வேண்டும் என்றிருந்தால் நபி (ஸல்) அவர்கள் நோன்பின் ஆரம்ப நேரமான பஜ்ர் வரை தன் குளிப்பைத் தாமதப்படுத்தியருக்க மாட்டார்கள்.
ஆக குளிப்பானது தொழுகையை ஆரம்பிப்பதற்கு முன்னுள்ள ஒரு கட்டாயக் கடமை. (மாறாக நோன்பு நோற்பதற்கு அல்ல) என்பதாலேயே அக்குளிப்பை தாமதப் படுத்தினார் (அல்லாஹ்வே மிக அறிந்தவன்)
 
© Muslim Vanoli '2016 All Rights Reserved' 24 Hours Tamil online Islamic Radio Station.